நியூஸிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கு முன்னர் 1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக பெனாசிர் பூட்டோ இருந்தபோது, அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததே, பிரதமர் குழந்தை பெற்ற நிகழ்வாக குறிக்கப்பட்டிருந்து.
கடந்த ஜனவரி மாதம், ஜெஸிந்தாவும் அவர் துணைவர் கிளார்க் கேஃபோர்டும் தாங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அறிவித்தனர்.
ஆக்லாந்திலுள்ள மருத்துவமனையில், பிரசவத்திற்கென்று குறிக்கப்பட்டதற்கு நான்கு நாட்கள் தாமதமாக, ஜெஸிந்தாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
வியாழன் மாலை 4:45 மணிக்கு 3.31 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தாம் ஆறு வாரங்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க இருப்பதாகவும் அந்த நாட்களில் துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், தம் அலுவல்களை கவனிப்பார் என்றும் ஜெஸிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.