படுக்கை அறையை வாஸ்து படி எப்படி அமைக்கலாம்.?

நம் வீட்டின் படுக்கையறையை வாஸ்து படி எப்படி அமைப்பது

by Vijayarevathy N, Sep 24, 2018, 20:04 PM IST

நம் வீட்டின்  படுக்கையறையை வாஸ்து படி  எப்படி அமைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.   

ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற வேண்டும் என்றால், வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும்.     

நம் வீட்டின் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

* ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.    

* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.    

 * படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.    

* மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.    

 * படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

You'r reading படுக்கை அறையை வாஸ்து படி எப்படி அமைக்கலாம்.? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை