சிம்ட்டாங்காரன் நல்லா இருக்கானா? இல்லையா?

சிம்ட்டாங்காரன் நல்லா இருக்கானா? இல்லையா?

by Mari S, Sep 24, 2018, 19:48 PM IST

தளபதி விஜய்யின் சர்க்கார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக், ‘சிம்ட்டாங்காரன்’ பாடல் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

துப்பாக்கி, கத்தி படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக ஏ.ஆர். முருகதாஸுடன் சர்க்கார் படத்தில் விஜய் இணைந்துள்ளார். அரசியல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வில்லியாக, வரலக்‌ஷ்மி சரத்குமாரும், அரசியல்வாதிகளாக ராதாரவி மற்றும் கரு.பழனியப்பனும் நடித்துள்ளனர்.

தீபாவளி சரவெடியாக வரவுள்ள சர்க்காரின் கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கி விட்டது. படத்தின் சிக்கிள் ட்ராக்கான ‘சிம்ட்டாங்காரன்’ பாடலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், மாலை 5 மணிக்கு சன் நெக்ஸ்ட் ஆப் மூலம் லைவ்வாக ரிலீஸ் செய்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், மெர்சலை தொடர்ந்து விவேக்கின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள சிம்ட்டாங்காரன் பாடல் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் பாடலா இது? என நினைக்கும் வகையில், ஏதோ அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்த பாடல் போல் உள்ளது சிம்ட்டாங்காரன். ஆனால், ஏ.ஆர். ரஹ்மானின், பாடல் ஆரம்பத்தில், புரியாது மற்றும் புடிக்காது. ஆனால், கேட்க கேட்க அடிக்ட் ஆகிடுவீங்க என விஜய்யின் ரசிகர்கள், பாடல்களை பல நூறு முறை ரிப்பீட் மோட் செய்து, டிரெண்டிங்கில் முதலிடத்தில் கொண்டு வந்துவிட்டனர்.

மெர்சல் ஆல்பத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை எழுதிய விவேக் தானா இப்பாடலையும் எழுதியது என சாமானிய ரசிகர்களே விமர்சிக்கும் வகையில் தான் இந்த பாடல் உள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்கள் இந்த எண்ணத்தை மாற்றும் வாய்ப்பும் உள்ளது. எப்படி இருந்தாலும், தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ‘சிம்ட்டாங்காரன்’ தாளம் போட வைத்து, துள்ளல் ஆட்டத்தை போடவைக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அஜித் ரசிகர்களுக்கு நல்ல மீம் மெட்டிரீயலாகவும், ட்ரோல் விடியோவாகவும் இந்த பாடல் இப்போதே அமைந்துள்ளதால், அஜித் ரசிகர்களும் செம்ம ஹாப்பி!

சிம்ட்டாங்காரன் லிரிக் விடியோ இதோ...

 

 

You'r reading சிம்ட்டாங்காரன் நல்லா இருக்கானா? இல்லையா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை