தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய ஆரோக்கியமான முளை கட்டிய நவதானிய சாலட் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருள்கள் -
- பச்சை பயறு - 100 கிராம்
- கொண்டை கடலை - 100 கிராம்
- காராமணி - - 50 கிராம்
- கொள்ளு - 50 கிராம்
- உப்பு - தேவைாயன அளவு
- வெங்காயம் நறுக்கியது - 50 கராம்
- தக்காளி நறுக்கியது - 1
- லெமன் சாறு - 2 ஸ்பூன்
- மல்லி இலை - சிறிதளவு
செய்முறை
- பயறு வகைகளை நன்கு கழுவி ஒரு வெள்ளை துணியில் கட்டி 12 மணி நேரம் வைக்கவும்.
- அவ்வாறு செய்தால் பயறு வகைகளில் முளை வர ஆரம்பித்து விடும்.
- பயறு வகைகளை அகலமான பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, லெமன் சாறு, உப்பு , மல்லி இலை அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.