நாடு முழுவதும் நடத்தப்படும் தகுதி தேர்வுகளின் போது, தேர்வு எழுதும் நீரிழிவு நோய் உள்ள மாணவர்களுக்கு யூஜிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் மாத்திரையை கொண்டு செல்ல பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி பிறப்பித்துள்ளது.
யுஜிசி என்கிற பல்கலைக்கழக மானியக்குழு உதவி பேராசிரியர்கள் மற்றும் ஜூனியர் ஆராய்ச்சி நிபுணர்களுக்கான தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தகுதி தேர்வுகள் நடைபெறும் தேதி வரும் அக்டோபர் 21ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. வரும் 30ம் தேதி வரை இதற்குரிய விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.
இந்நிலையில் தகுதி தேர்வு எழுதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தேர்வு எழுதும் மையங்களுக்கு மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் தெளிவாக பார்க்கக்கூடிய நிலையில் உள்ள தண்ணீர் பாட்டில்களையும் எடுத்து வரலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொட்டலம் செய்யப்பட்ட மிட்டாய், சான்ட்விட்ஞ்ச் உள்ளிட்ட உணவு பொருட்களை அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்கலைக்கழக மானியக் குழுவில் புதிய அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.