மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு

Aug 31, 2018, 10:15 AM IST

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வை கட்டாயமாக்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் உயர்கல்வி துறையில் நுழைவு தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய போட்டி தேர்வு முகமை என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இதற்கான முகாம், நாடு முழுவதும் 2,697 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களை நீட் பயிற்சி மையங்களாக மாற்றி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி மையங்கள் வரும் செப்டம்பர் 8ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் மொபைல் ஆப் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்குகிறது.

You'r reading மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை