வயது முதியவர்களுக்கேற்ற முளைக்கீரை சப்பாத்தி

வயது முதியவர்களுக்கேற்ற முளைக்கீரை சப்பாத்தி

by Vijayarevathy N, Sep 26, 2018, 11:25 AM IST

முளைக்கீரை பசியைத்தூண்டுகிறது. உடல் சூடு, இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் இக்கீரையை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இக்கீரையை எப்படி சமைப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

முளைக்கீரை – 1 கட்டு

வெங்காயம் – 1

ப.மிளகாய் – 4

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

உளுந்து – 3 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மூளைக்கீரை உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் வேக வைத்த கீரை, சிறிது உப்பு, சில துளி எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

இந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முளைக்கீரை சப்பாத்தி ரெடி.

இந்த முளைக் கீரை சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஆனியன் ராய்தா உகந்தது.

You'r reading வயது முதியவர்களுக்கேற்ற முளைக்கீரை சப்பாத்தி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை