வழுக்கையான தலையில் மீண்டும் முடி வளர ?

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி எப்போதும் ஆரோக்கியமாக வளரும்.

by Vijayarevathy N, Sep 26, 2018, 14:47 PM IST

உடல் கோளாறுகள், மன உளைச்சல், வைட்டமின் குறைபாடுகள், வயது முதிர்ச்சி, தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள், அதிகமான காபி, தேனீர், குளிர்பானங்கள் பருகுவது ஆகிய காரணத்தினால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிப்படையும்.

அதுவும் புரதச்சத்து குறைபாட்டினால் முடிகள் உடைந்து, வறண்டு, செம்பட்டை நிறமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.எனவே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி எப்போதும் ஆரோக்கியமாக வளரும்.

தலைமுடி பிரச்சனையை தடுப்பது எப்படி?தலைமுடி அனைத்தும்  விழுந்து வழுக்கையான இடத்தில் காளானை நன்கு அரைத்துத் தேய்த்து வந்தால் மீண்டும் முடி வளரும்.

அரைப்படி உப்பை ஒரு தொட்டி தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை அந்த நீரில் குளித்து வந்தால் தலை முடி நன்றாக வளரும். கடலை மாவு, புளித்த தயிர் ஆகிய இரண்டையும் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள அழுக்கு நீங்கி தலைமுடி நன்கு வளரும்.

இரவில் படுக்கும் முன் தலையில் சிறிது விளக்கெண்ணெய்யை தேய்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.எலுமிச்சம் பழச்சாற்றை 2 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிராது.

ஆலமரத்தின் விழுதை நன்கு அரைத்து மாவாக்கி அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வர தலைமுடி அடர்த்தியாகும்.

You'r reading வழுக்கையான தலையில் மீண்டும் முடி வளர ? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை