வீக்என்ட் ஸ்பெஷல்: அசத்தலான மீன் கட்லெட்

Advertisement

அசைவ உணவு என்றாலே உடலுக்கு தீங்கானதுதான். இதில் விதிவிலக்காக உள்ளவை மீன். சில பேருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால் பிடிக்காது அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு சுத்தமாக பிடிக்காது. கவலை வேண்டாம் இங்கே குறிப்பிட்டுள்ளவாறு மீன் கட்லெட் செஞ்சி சாப்பிட்டு பாருங்க, செமயா இருக்கும்.

தேவையான பொருட்கள்

* மீன் – 1/2 கிலோ

* உருளைக்கிழங்கு – 2

* சின்ன வெங்காயம் – 100 கிராம்

* பச்சைமிளகாய் – 5

* சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்

* மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்

* மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

* இஞ்சி,பூண்டுவிழுது – 1/4 ஸ்பூன்

* மல்லி இலை – 1 கொத்து

* புதினா இலை - 1 கொத்து

* பிரெட் கிரம்ப்ஸ் – 4

* முட்டை – 4

* எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* மீன் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

* அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

* மு‌ட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

* ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்ததும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக  நமக்கு பிடித்த வடிவில் தட்டி, முட்டையில்  தோய்த்து பிரெட் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

மீன் கட்லெட்டை டொமேட்டோ சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிடலாம்

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>