உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் தொடர்ந்து திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன.
சமீபத்தில் தான் அம்பானியின் மகளான இஷா அம்பனிக்கு இத்தாலியில் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. இதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டில் "கிரஹ சாந்தி" பூஜையும் கொண்டாடப்பட்டது.
அவ்விழாவில் இஷா அம்பானி கையால் வடிவமைக்கப்பட்ட, பூத்தையல் பின்னிய லெஹங்கா உடையில் மிகவும் அழகாக காட்சியளித்தார். அந்த புகைப்படத்தை அவரை அலங்கரித்த புகழ்மிக்க உடை வடிவமைப்பாளாரான
சப்யாசச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இஷா அம்பானியின் உடை அலங்காரம் இந்தியாவின் மறுமலர்ச்சி திட்டத்திற்கான ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார். இவர் மிகப்பெரிய தொழிலதிபரான அஜய் பிரமோலின் மகன் ஆவார். இஷா அம்பானிக்கும், ஆனந்திற்கும் கடந்த மே மாதம் இத்தாலியில் உள்ள நட்சத்திர விடுதியில் மூன்று நாட்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இவர்களது திருமணம் டிசம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.