தமிழ் நாட்டு வாக்காளர் பட்டியல்களில் வடஇந்தியர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றசாற்றை தொடந்து திருச்சியில் விளக்கம் அளித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.
அவர் கூறியதவது "வாக்காளர் பட்டியல்களில் வட இந்தியர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதாக இதுவரை எழுத்துபூர்வ புகார்கள் வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ கூறியுள்ளார்".
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்டல அளவிலான தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்களும், மாநகராட்சி ஆணையர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.