சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, நாளை பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதால், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காரைக்குடி அருகே கோவிலூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தமிழ்நாடு கெமிக்கல் என்ற தனியார் ரசாயன ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளும் ஏற்படுவதாகக் கூறி 3 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை பெரிய அளவில் போராட்டம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டு இருப்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்க ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.