தஞ்சாவூர் மாவட்டம் மேல உழூரில் கல்யாண ஓடைக் கால்வாய் கரை உடைந்து ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மேல உழூரில் நேற்றுக் கல்யாண ஓடையின் கரை உடைந்து வெளியேறிய நீர் விளைநிலங்களில் புகுந்தது. இதனால் மேலஉழூர், கீழஉழூர், பருத்திக்கோட்டை, தும்பத்திக்கோட்டை, பொன்னாப்பூர், கண்ணந்தங்குடி ஆகிய ஊர்களில் நட்டு 15நாட்களே ஆன நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் 2நாட்களாகத் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அழுகிப் போகும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கால்வாயைச் சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தாததே கரை உடைந்ததற்குக் காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.