மதுரையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் 10 மணி நேரத்திற்கு பின்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளர்கள்.
மதுரையில் இருந்து மதியம்12.50 மணியளவில் புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகும் என ஆரம்பத்தில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது ஆனால் அதன் பிறகு எந்த அறிவிப்பு வழங்கப்படவில்லை என பயணிகள் தெரிவிதார்கள்.
பிறகு இரவு 7.50 மணியளவில் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணத்தால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிதார்கள். இது குறித்து விமானத்திற்காக காத்திருந்த பயணி ஒருவர் கூறியதாவது "70 பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்காக காத்திருந்தோம். அதில் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் இறுதிசடங்கிற்கு செல்வதற்காக காத்திருந்தார் எங்களுக்கான முறையான அறிவிப்பை கூட அவர்களால் சரியாக வழங்க முடியவில்லை என்று கோபமாக கூறினார்.
நிர்வாகத்தரப்பில் விமானத்தில் எற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது எனவும், அதே சமயம் அதனை சரி செய்ய முயற்சித்து முடியவில்லை அதனால் அதற்கு மாற்றாக சனிக்கிழமை காலை மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிதார்கள்.
இதற்கிடையில் ராமசாமி என்பவர் மதுரை போலீஸ் நிலையத்திடம் போனில் தொடர்பு கொண்டு சனிக்கிழமை காலை புறப்பட வேண்டிய விமானத்தில் வெடிக்குண்டு வைப்பதற்கு இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
இதனை அடுத்து எஸ்.பி.மணிவன்னன் விமான நிலைய நிர்வாகிகளிடமும், பாதுகாப்பு அதிகாரிகளிடமும் எச்சரிக்கை செய்தார் அதே நேரத்தில் போனில் பேசிய நபரிடம் விசாரிக்க முயன்ற போது அந்த போன் ஆப் செய்யப்பட்டுள்ளது, இதனல் அங்கு சில நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விமான நிலையத்திலும் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பும் சரியாக உள்ளது என போலீஸ் தரப்பும், நிர்வாகமும் தெரிவித்த பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தார்கள்
விமானம் தாமதம் அவ்வப்போது ஏற்படுவது சகஜம்தான் ஆனால் பயணிகளுக்கு அதற்கான அறிவிப்பை முன்பே சொல்லி அவர்கள் காத்திருக்கும் வரை அவர்களுக்கு தேவையானவற்றை செய்தால் மீண்டும் உங்கள் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவார்கள். பயணிகளை இவ்வாறு அழைக்கழித்தால் மீண்டும் உங்கள் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவார்களா என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்.