மீடூ புயல் ஓய்ந்துவிட்டது என்று எண்ணிய நிலையில், பேட்ட நடிகர் மீது பாலிவுட் நடிகை நிஹாரிகா மீடூ பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள பாலிவுட் நாயகன் நவாஸுதின் சித்திக் தான் தற்போது மீடூ புயலில் சிக்கியுள்ள பிரபலம். நவாஸுதின் சித்திக்கின் முன்னாள் காதலியும், முன்னாள் மிஸ் இந்திய அழகியுமான நிஹாரிகா சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் மிக நீண்ட மீடூ பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், நவாஸுதின் சித்திக், ஷஜித் கான் மற்றும் டி-சீரிஸ் தலைவர் பூஷன் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2005ம் ஆண்டு மிஸ் இந்திய அழகி பட்டத்தை வென்ற நிஹாரிகா, பாலிவுட்டில் நாயகியாக மாற தயாரிப்பு கம்பெனிகளை தேடி அலைந்தார். அப்போது தான் டி- சீரிஸ் நிறுவனத்தை தற்போது நிர்வகிக்கும் தயாரிப்பாளர் பூஷன் குமாரை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக நிஹாரிகா கூறியுள்ளார்.
‘A New Love Ishtory’ படத்திற்கு தன்னை ஒப்பந்தம் செய்த பூஷண், இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய என்வெலப் கவரை முன் பணமாக கொடுத்தார். பின்னர், எனக்கு மெசேஜ் செய்த அவர், உன்னிடம் தனியாக நிறைய பேசவேண்டும். எனக்கு ஒத்துழைப்பு அளித்தால், நீ எங்கேயோ போய் விடுவாய் என்றார். அவருக்கு நான் பதில் அளித்தேன். ”நிச்சயமாக சம்மதிக்கிறேன்.. நாம் டபுள் டேட் செய்வோமா? நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள்.. நான் என் காதலனை அழைத்து வருகிறேன் என்றேன் அதன் பின்னர் அவர் எனக்கு ரிப்ளை செய்யவில்லை” என நிஹாரிகா தெரிவித்துள்ளார்.
அடுத்தபடியாக, பாலிவுட் மற்றும் நெட்பிளிக்ஸின் நாயகனாக வலம் வரும் நவாஸுதின் சித்திக், ஒரு நாள் உன் வீட்டிற்கு அருகே இருக்கிறேன். பார்க்கலாமா என்றார். நானும், அவரை வரவேற்றேன். உள்ளே வந்த அவர் என்னுடைய அந்தரங்க பாகங்களை தீண்டினார். நான் அவருடன் சண்டையிட்டேன். எனக்கு மிஸ் இந்தியா அல்லது ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதே ஆசை என்று கூறினார். என்னை காதலிப்பதாக கூற, நானும் அவர் வலையில் விழுந்தேன். பின்னர் தான் தெரிந்தது. அவர் பல பெண்களுடன் காம களியாட்டம் புரிபவர் என்று, அவரது உறவை அத்துடன் துண்டித்து கொண்டேன் என்றார்.
மேலும், ஷஜித் கானும் தன்னுடன் தவறாக நடந்து கொண்டார் எனவும், மிக நீண்ட மீடூ பதிவை வெளியிட்டு பாலிவுட்டில் மீண்டும் மீடூ புயலை கிளப்பியுள்ளார். இதுவரை முன்னணி நாயகர்கள் பெயரை யாரும் மீடூவில் குறிப்பிடவில்லை. இந்நிலையில், நிஹாரிகா வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு ஆதரவு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.