கோமளவல்லி ஜெயலலிதாவின் உண்மையான இயற்பெயரா? சர்காருக்கும், கோமளவல்லிக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளை கூகுளை நோக்கி வீசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சர்கார் படத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வரும் அதிமுகவினர் 'கோமளவல்லி' என்ற அஸ்திவாரத்தையும் கையில் எடுத்துள்ளனர்.
கோமளவல்லி என்ற அம்முவே... ஜெ.வுக்கு எதிராக அன்று கர்ஜித்த இளங்கோவன்
இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என்றும், சர்கார் படத்தில் இந்தக் கதாப்பாத்திரத்தின் காட்சியமைப்புகள் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் நோக்கில் இருப்பதாகவும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், எத்தனையோ பெயர்கள் இருக்கும்போது அந்தப் பெயரை மட்டும் வைத்து இருப்பதை காழ்ப்புணர்ச்சியாகவும், கொச்சைப்படுத்தும் செயலாகவே பார்ப்பதாக கூறினார்.
இதற்கு மாறாக டிடிவி தினகரன் கூறுகையில், கோமளவல்லி என்பது ஜெயலலிதா பெயர் இல்லை. என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இது போன்ற பதிலால் குழம்பிய நெட்டிசன்கள் இந்த விவகாரத்திற்கு கூகுளில் விடை தேடி வருகிறார்கள்.
இது உண்மையாகவே ஜெயலலிதாவின் இயற்பெயர்தானா? சர்காருக்கும், கோமளவல்லிக்கும் என்ன தொடர்பு? போன்ற வகையில் கூகுள் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அண்மையில் கூகுளில் அதிகம் தேடிய வார்த்தைகளில் கோமளவல்லி என்ற பெயரும் இணைந்துள்ளது.