மதுரை அருகே அ.ம.மு.க நிர்வாகி வெட்டி கொலை

by எஸ். எம். கணபதி, Dec 19, 2019, 12:03 PM IST

மதுரை அருகே அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரைமாவட்டம், மேலூரை அடுத்துள்ள ஏ.வெள்ளாளபட்டியைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி அசோகன். ஏற்கனவே கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர்.

இன்று(டிச.19) காலை அழகர்கோயில் சாலையில் அசோகன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து சடலத்தை சாலை அருகே போட்டு விட்டு தப்பி விட்டனர்.

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து அவரது உடலை எடுத்து, மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனை செய்ய வசதி இல்லாததால், அசோகன் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது அசோகனின் உறவினர்கள் அங்கு திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி உடலை எடுத்து சென்றனர். இந்த கொலை சம்பவம் வெள்ளாளப்பட்டியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a reply