சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை : அரசு பரிசீலனை

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாலமேட்டில் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்தார்.

by Balaji, Jan 15, 2021, 14:06 PM IST

மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விவரித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது . விரைவில் இது குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார்.

ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆர்வத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க வரவில்லை, அரசியலை முன்னிறுத்தித் தான் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க வந்துள்ளார்கள்.அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.வரும் 30ம் தேதி திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்குக் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது இந்த கோவிலை வரும் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி நேரில் வந்து திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

You'r reading சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை : அரசு பரிசீலனை Originally posted on The Subeditor Tamil

More Madurai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை