உசிலம்பட்டியில் மீண்டும் அரங்கேறும் பெண் சிசுக்கொலை

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி நள்ளிரவில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மேலும் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டு பிரேதப் பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்தனர். பிரேத பரிசோதனையில் ஏற்படுத்தப்பட்டு குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உசிலம்பட்டி போலீசார் பெற்றோர் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை எஸ்.பி சுஜித்குமார் இந்த சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.பெண் சிசுக் கொலை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
group-4-exam-malpractice-high-court-orders-keeping-documents-safe
குரூப்-4 தேர்வு முறைகேடு : ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
female-infanticide-again-araises-in-usilampatti
உசிலம்பட்டியில் மீண்டும் அரங்கேறும் பெண் சிசுக்கொலை
collection-of-doll-fee-without-permission-high-court-issues-new-order-to-madurai-corporation
அனுமதியின்றி சுங்க கட்டணம் வசூல்: மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
high-court-orders-release-of-aquatic-civic-works-details-on-internet
குடிமராமத்து பணி விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
seeking-a-stay-illegal-lending-mobile-apps-case-is-adjournment
கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளிவைப்பு
mp-bans-demolition-of-old-buildings-at-madurai-government-hospital
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்களை இடிக்க எம்.பி. தடை
priority-in-government-service-for-the-best-bull-catch-player-government-review
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை : அரசு பரிசீலனை
two-arrested-for-black-flag-avanyapuram-at-jallikattu-ground
ஜல்லிக்கட்டு மைதானத்தில் கருப்புக்கொடி அவனியாபுரத்தில் இருவர் கைது
avanyapuram-jallikattu-high-court-orders-to-conduct-with-conditions
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நிபந்தனைகளுடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...
coincidence-in-the-jallikkattu-festival-committee-case-in-the-high-court
ஜல்லிக்கட்டு விழா குழுவில் சமவாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!

READ MORE ABOUT :

/body>