ஈரோடு மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ; 1 முதல் 8 ம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தனியார்ப் பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத்துறையின் ஆலோசனையினை பெற்று முதல்வர் முடிவு செய்வார் .
11 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 10 வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் முதல்வர் தான் முடிவு செய்வார் . தேர்தலுக்கு முன்பே பல்வேறு திட்டங்களைத் தமிழக முதல்வர் அறிவித்து வருவதாகவும் கல்வியாளர்களின் ஆலோசனையின்படி நூலகங்களுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.