குடிமராமத்து பணி விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

by Balaji, Feb 9, 2021, 16:17 PM IST

தமிழகத்தில் நடக்கும் குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி கிடையாது எனவே அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்வதால் அதில் நடைபெறக்கூடிய ஊழல் குறைய வாய்ப்பு உள்ளது- நீதிபதிகள்.இந்த உத்தரவைத் தமிழக அரசு 12 வாரங்களில் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு.பணி ஆரம்பிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் பணி முடிந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சேர்த்து இணைய தளத்தில் பதிவிட வேண்டும் - நீதிபதிகள்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து குறித்த அனைத்து விவரங்களையும் அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.கடந்த 2019ஆம் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்திருந்தார்.

தற்போது போதிய மழை பெய்தும், தமிழகத்தில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாகத் தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம். இந்த பணிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதால் இதுகுறித்த விவரங்களைப் பொதுமக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட உத்தர விட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல. ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் அங்கு முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படும்.

எனவே மனுதாரரின் கோரிக்கையைக் குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளம் ஒன்றைத் துவக்கி அதில் குடிமராமத்து பணிகள் நடக்கும் இடம், பணியின் விவரம் கால அளவு அதற்காகச் செலவிடும் தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் என முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.பணி ஆரம்பிக்கப்பட்ட போதும் முடிவு பெற்ற போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைய தளத்தில் பதிவிட வேண்டும் 12 வாரக் காலத்தில் இதை அரசு நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

You'r reading குடிமராமத்து பணி விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Madurai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை