மறைந்த நடிகர் ரிஷி கபூரின் சகோதரர், நடிகர் ராஜீவ் கபூர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 58.ராஜீவ் கபூர் யார் என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவரும் சிறந்த நடிகர்களில் ஒருவர். ராஜீவ் கபூர் 1983 ஆம் ஆண்டில் ஏக் ஜான் ஹைன் ஹம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அவர் ஆஸ்மான், லவர் பாய், ஜபர்தாஸ்ட் மற்றும் ஹம் டு சேல் பர்தேஸ் போன்ற படங்களில் நடித்தார்.ராஜீவ் கபூர், ராம் தேரி கங்கா மெயிலியில் நரேந்திரனாக நடித்தார். 1985 ஆம் ஆண்டில் வெளியான இப்படம் ராஜ் கபூர் இயக்கிய கடைசி பட மாக அமைந்தது.ராஜீவ் கபூர் மேலும் , ஆ அப் லவுட் சலென், பிரேன்க்ராந்த், ஹென்னா என 3 படங்களைத் தயாரித்திருப்பதுடன் ஆ அப் லவுட் சலென் படத்துக்கும், பிரேம் கிரான்ந்த் படத்துக்கும் எடிட்டிராக பணியாற்றினார்.
மேலும் பிரேம் ரோக், பீவி ஒ பீவி படங்களில் செகண்ட் யூனிட் டைரக்டராக பணியாற்றினார். பிரேம் கிராந்த் படத்தின் இயக்குனரும் ராஜீவ் கபூர்தான்மறைந்த நடிகர் ரிஷிகபூர் மனைவி நீது கபூர் இன்ஸ்டாகி ராமில் மறைந்த நடிகர் ராஜீவ் கபூருக்கு இரங்கல் தெரிவித் தார். ராஜீவ் கபூரின் புகைப் படத்தைப் பகிர்ந்தார். மடிந்த கைகள் இமோஜியை பகிர்ந்தவர் "ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று குறிப்பிட்டார்.அதேபோல் ரந்தீர் கபூர் தனது சகோதரர் ராஜீவ் கபூர் இறந்த செய்தியை உறுதிப்படுத்தினார். "நான் எனது இளைய சகோதரர் ராஜீவை இழந்து விட்டேன், அவர் இப்போது இல்லை. மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை" என்று கூறினார்.
"நான் மருத்துவமனையில் இருக்கிறேன், அவரது உடலுக்காகக் காத்திருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.தற்போது இறந்த ராஜீவ் கபூரின் சகோதரர் ரிஷிகபூர் பாலிவுட்டில் கபூர் குடும்பத்தில் மிகவும் பிரபலமான நடிகர். பாபி படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டார். அதன்பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்து 70, 80களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார்.ரிஷிகபூர் 2018 முதல் ரத்த புற்றுநோயை எதிர்த்துப் போராடினார். அதற்கான சிகிச்சையும் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிஷி கபூர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணம் பாலிவுட்டை திடீர் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.