ராஜ்ய சபா எம்பி பதவி கேட்கும் காமெடி நடிகர்.. எந்த கட்சி தரப்போகிறது..

by Chandru, Feb 9, 2021, 15:05 PM IST

சூப்பர் ரஜினிகாந்த்துடன் எந்திரன், விஜய்யுடன் தலைவா, அஜீத்துடன் வீரம். ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் விஷால் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி வேடங்களில் நடித்த வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாகத் தான் நடிப்பது என்று முடிவு செய்து அதன்படி ஹீரோவாகவே கடந்த சில ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதன்பிறகு அவர் ஹீரோக்களின் நண்பராக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். லட்டு திண்ணா ஆசை, ஏ 1, இனிமே இப்படித் தான், தில்லுக்கு துட்டு, பிஸ்கோத் என பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

தற்போது பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஜான்சன் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். அனைகா சோடி ஹீரோயினாக நடிக்கிறார்.இப்படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு இன்று காலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. அதில் சந்தானம் பேசும்போது,பாரிஸ் ஜெய ராஜ் படத்தில் கானா பாடும் பாடகராக நடித்திருக்கிறேன். புளியந்தோப்பு ராயபுரம், பாரிஸ் கார்னர் பகுதிகளில் கானா பாடல்கள் பிரபலம். ஒரிஜனலாகவே கானா பாடல் பாடுபவர்கள் பாடல் எழுதிப் பாடி இருக்கின்றனர். கானா என்பது ஒரு தனித் தமிழ் பாடல் கிடையாது இந்தி, ஆங்கிலம், மலையாளம் என எல்லா மொழியிலும் கலந்து இந்த பாடலில் வரிகள் இடம் பெற்றிருக்கும்.

நான் நடித்த பிஸ்கோத் படம் கொரோனா லாக் டவுன் தளர்வில் வெளியானது. ஒடிடியில் படத்தை வெளியிடுவதா? தியேட்டரில் வெளியிடுவதா என்று பேசிக்கொண்டிருந்தபோது தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது என்னை இந்த நிலைக்கு உயர்த்திய எனது ரசிகர்களை அழைத்துக் கேட்டேன். அவர்கள் தியேட்டரில் வெளியிடுங்கள் நாங்கள் இருக்கிறோம் என்றார்கள். இதையடுத்து தியேட்டரில் வெளியிட்டோம். பாரிஸ் ஜெயராஜ் பிப்ரவரி 12ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. நகைச்சுவை படமாக இது உருவாகி இருக்கிறது. திடீரென்று ஆக்‌ஷன் படத்தில் ஏன் நடிப்பதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். இப்படி என்னை ஏன் குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக்‌ஷன் படத்தில் நடித்தால் ஏன் காமெடி படத்தில் நடிப்பதில்லை என்கிறார்கள். ஆக்‌ஷனெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு காமெடியே நன்றாக போய்க்கொண்டிருக்கிறது அதுபோதும் அரசியல் கட்சியில் சேர்வீர்களா என்கிறார்கள். எந்த கட்சியில் ராஜ்யசபா எம் பி பதவி தருகிறார்களோ அந்த கட்சியில், சேர்ந்துக்கொள்வேன்.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

You'r reading ராஜ்ய சபா எம்பி பதவி கேட்கும் காமெடி நடிகர்.. எந்த கட்சி தரப்போகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை