பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

by எஸ். எம். கணபதி, Mar 6, 2020, 15:24 PM IST

உசிலம்பட்டி அருகே மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவதை அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது. மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.

கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும்!
இவ்வாறு கூறியுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Madurai News

அதிகம் படித்தவை