அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதில் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே என திமுகவுக்கு இணையான பிரமாண்ட கூட்டணியாக, இந்த அணியைக் காட்ட உள்ளனர்.
இதற்கான எடப்பாடி பழனிசாமி கொடுத்த விலையைப் பற்றித்தான் திமுகவினர் பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே கூட்டணிப் பேச்சுவார்த்தையில் முதல் அமைச்சரின் நம்பிக்கைக்குரிய சேலம் இளங்கோவன் ஈடுபட்டு வந்தார்.
தைலாபுர தோட்டம், ஜிகேமணி வீடு எனப் பேச்சுவார்த்தையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். தருமபுரி தொகுதியை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அன்புமணிக்குத் தைரியம் கொடுத்தது அதிமுக.
இந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 5 அல்லது 6 இடங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது. தொகுதி செலவு பிளஸ் அட்வான்ஸ் என நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேரங்கள் அரங்கேறியிருக்கிறது.
தொகுதிக்கு 35 கோடி ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 300 சி வரையில் டிமாண்ட் பேசி முடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர் அதிமுக பொறுப்பாளர்கள். அதனால்தான் அதிமுகவின் 2 ஆயிரம் ரூபாய் திட்டம் உட்பட அனைத்தையும் வரவேற்றுப் பேசத் தொடங்கினாராம் ராமதாஸ்.
கொடநாடு வீடியோவை மேத்யூ சாமுவேல் வெளியிட்ட நாட்களில் இந்தப் பேரம் தீவிரமாக நடந்தது. இப்போது அனைத்தும் சுபம் என்ற நிலைக்கு வந்துவிட்டது எனவும் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
-அருள் திலீபன்
அதிமுகவிடம் டிமாண்ட் வைத்த பாமக! எடப்பாடி அள்ளிவிட்ட மலைக்க வைக்கும் 'வைட்டமின் ப'