திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

by Nagaraj, Feb 20, 2019, 10:34 AM IST
Share Tweet Whatsapp

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் டெல்லியில் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்த தில் மகிழ்ச்சி என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தெரிவித்துள்ளார்.

இதனால் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக ஒரு தகவலும், புதுச்சேரியையும் சேர்த்து 11 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று மாலை அண்ணா அறிவாயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரும் சென்னை வருகின்றனர்.


Leave a reply