தமது பலத்தை பற்றி மிகை மதிப்பீடு செய்து கொண்டு பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை எந்த அணியும் கண்டு கொள்ளாமல் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவின் தமிழிசை, எச். ராஜாவைவிட படுதீவிரமாக பேசிவந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு உள்ளிட்ட அத்தனை தமிழின விரோதங்களுக்கும் பொழிப்புரை, விளக்க உரை கொடுத்து வந்தார் டாக்டர்.
பாஜக- அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துவிடுவோம் என கணக்குப் போட்டு காத்திருந்தார். ஆனால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தியது அதிமுக-பாஜக அணி. இதனால் உப்புமா கட்சிகளுடன் இணைந்து தனியே ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கப் போவதாக புலம்பினார் டாக்டர்.
இப்போது வேறுவழியே இல்லாமல் அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் டாக்டர். அதேபோல் தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை நிறுத்துங்கள் என அதிமுக தரப்பு சரத்குமாரிடம் கூறியது. ஆனால் சரத்குமாரோ தமக்கே சீட் வேண்டும்; அதற்கு இத்தனை சி தேவை என ஓவர் பில்டப் கொடுத்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அதிமுக டமாரென கதவை மூடி வெளியே தள்ளிவிட்டது.
சரி தினகரனாவது கூப்பிடுவார் என காத்திருந்த சரத்குமாருக்கு ஏமாற்றமே மிச்சம். டாக்டர் கிருஷ்ணசாமியைப் போலவே நடுத்தெருவில் யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கிறார் சரத்குமார். இதுக்குத்தான் ஓவர் பில்டப் ஒடம்புக்கு ஆகாதுன்னு சொன்னாங்களோ?