சூடுபிடிக்கிறது வேலூர் தேர்தல் களம்; எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று முதல் பிரச்சாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்களே இடைவெளி உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று ஒரே நாளில் பிரச்சாரம் தொடங்குவதால், வேலூர் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. Read More


'முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது' எதிர்கட்சிகள் எதிர்ப்பு;அதிமுக ஆதரவு

இஸ்லாமிய பெண்களை, அவர்களின் கணவர்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.கடந்த முறை இந்த மசோதாவுக்கு 37 அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முறை அக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். Read More


வேலூர் மக்களவை தேர்தல்; இழுபறிக்குப் பின் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் வேட்புமனுக்கள், எதிர்ப்பு காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. Read More


வேலூர் தொகுதி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள்

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்ற அமைச்சர்கள் தலைமையில் மொத்தம் 209 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More


அதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக?

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுமா? மோடி எதிர்ப்பு அலை வேலூரிலும் தொடருமா? இதுதான் இப்போதைய தமிழக அரசியலின் பரபரப்பு Read More


வேலூர் மக்களவை தேர்தல்; திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.. அதிமுக கூட்டணியில் ஏ.சி.எஸ்

வேலூர் மக்களவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். Read More


அவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்...! மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்

மக்களவையில் அதிமுக சார்பில் தான் ஒரே ஒரு எம்.பி. தான் என்றாலும், எனக்கு பேச நேரம் கொடுத்தால், தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மீது திமுக கூட்டணி எம்.பி.க்கள் 37 பேர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் உள்ளது என்று ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆவேசம் காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார். Read More


மக்களவையில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஓபிஎஸ் மகன் மட்டுமே

மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது Read More


போட்டியின்றி தேர்வான ஓம் பிர்லா.. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்

மக்களவையின் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியும், மக்களவை காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர் Read More


தமிழ் வாழ்க..காந்தி, காமராஜர், பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா வாழ்க..! மக்களவையில் ஓங்கி ஒலித்த தமிழக எம்.பி.க்கள்

மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றனர்.அப்போது தமிழ் வாழ்க என்ற கோஷத்துடன், பெரியார், காந்தி, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களும் உச்சரித்து வாழ்க முழக்கமிட்டு மக்களவையில் தமிழின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர் Read More