திமுக கூட்டணிக்குள் திடீரென நுழைந்து ஒரு இடத்தை ஐஜேகே பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாரிவேந்தரின் ஐஜேகே. இதனால் திமுக எதிர்ப்பு செய்திகளை குறிப்பாக சன் குழுமத்துக்கு எதிரான செய்திகளை வரிந்து கட்டிக் கொண்டு புதிய தலைமுறை ஒளிபரப்பியது.
இதேபோல் சன் குழுமமும் பாரிவேந்தருக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த நிலையில் பாஜக- அதிமுக அணியில் பாமக இணைந்தது.
பாமகவுடன் நீண்டகாலமாக முறுக்கிக் கொண்டிருக்கும் பாரிவேந்தர் சட்டென திமுக அணிக்குத் தாவ முடிவெடுத்தார். எடுத்த எடுப்பிலேயே ரூ100 சி அட்வான்ஸாக கொடுத்துவிடுகிறேன். 1 சீட் கொடுத்துவிடுங்கள்... நீங்க கேட்கும் தொகையை அடுத்து தருகிறேன் என சொன்ன கையோடு அறிவாலயத்துக்கு போய்விட்டாராம்.
திமுகவும் மகிழ்ச்சியுடன் பாரிவேந்தரை வரவேற்று ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டது.
- எழில் பிரதீபன்