லோக்சபா தேர்தலில் தடாலடியாக திமுக அணிக்குள் நுழைந்த ஐஜேகே தலைவர் பாரிவேந்தருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திமுகவுடனான தோழமை கட்சிகள் தொகுதிகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஐஜேகே உள்ளே நுழைந்து ஒரு இடத்தைப் பெற்றது. இதனால் இதர கட்சிகள் சற்றே பொறாமை அடைந்தன.
ஆனால் பாரிவேந்தர், தமக்கு கள்ளக்குறிச்சி தொகுதிதான் வேண்டும் என அடம்பிடிக்கிறார். திமுக தலைமையோ கள்ளக்குறிச்சியில் திமுக போட்டியிடுகிறது; நீங்கள் பெரம்பலூரை வாங்கிக் கொள்ளுங்கள் என கறாராக கூறிவிட்டது.
பெரம்பலூரில் போட்டியிட்டு தோற்ற அனுபவத்தால் கள்ளக்குறிச்சியை கேட்டிருக்கிறார் பாரிவேந்தர். திமுக தலைமை தெளிவாக பெரம்பலூர் வேண்டாம் எனில் ஆதரவு மட்டும் தாங்க.. சட்டசபை தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என தகவல் அனுப்பி விட்டது.
இதனால் பாரிவேந்தர் தரப்பு அடுத்து என்ன செய்யலாம்? என தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.