சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் புகுந்து, மேற்கொண்டு செல்ல முடியாமல் திணற, பேச்சை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தித் தர உதவி செய்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மாலையில் மத்திய சென்னை வேட்பாளரர் சாம்பாலுக்கு ஆதரவாக சிந்தாதிரிப்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங் கினார். அயனாவரத்தில் நடுரோட்டில் வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். நான்கு புறமும் கூ ட்டம் திரண்டிருந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எடப்பாடி பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு சைரன் அடித்துக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் கூட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்டு மேற்கொண்டு நகர முடியாமல் திணறியது. இதைக் கண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனே பேச்சை நிறுத்தினார்.
ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கப்பா... என்று கூட்டத்தினரை ஒதுங்கச் சொல்லிவிட்டு தான் நின்றிருந்த வேனையும் ஓரங்கட்டச் சொல்லி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார் முதல்வர்தல்வர் எடப்பாடி பழனிச்சாமி.