மேளதாளத்துடன் பூக்கள் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு!

students Welcome to voters to spray flowers with gourds

by Subramanian, Apr 11, 2019, 11:08 AM IST

உ.பி.யில் களைகட்டிய முதல் கட்ட வாக்குப்பதிவு
உத்தர பிரதேச மாநிலத்தில் ஓட்டு போட வந்த வாக்காளர்களை மேளதாளத்துடன் பூக்கள் தூவி வரவேற்ற நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது. மக்களை தேர்தல் இன்று தொடங்கி மே 19ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் அதிக மக்களவை தொகுதியை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இன்று 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதலே அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தின் பாக்பத் தொகுதியில் பாராவ்த் பகுதியில் உள்ள பூத் எண் 126ல் வாக்களிக்க வந்த வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர்களை தூவி என்.சி.சி. மாணவர்கள் வரவேற்றனர். மாணவர்களின் இந்த செயல் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.

 

185 வேட்பாளர்கள் போட்டியிடும் நிஜாமாபாத் தொகுதி: சின்னத்தை கண்டுபிடிக்கவே அரை மணி நேரம் ஆகும்!

You'r reading மேளதாளத்துடன் பூக்கள் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை