பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து கொண்டிருந்த மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மக்களைவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி தொடங்குகிறது. நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால், நாடு முழுவதும் விறுவிறுப்பாகப் பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி, தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், உத்திர பிரதேசம் அலிகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து திடீரென தீ பற்றியது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரதமரின் பாதுகாவலர்கள் விரைந்து தீயை அணைத்தனர். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து செல்லும் வயரில் மின் கசிவு ஏற்பட்டதால் ‘தீ’ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் குறைந்ததிற்குப் பிறகு மோடி மீண்டும் தனது உரையை தொடர்ந்தது. தீ விபத்தை அடுத்து, மேடை ஏற்பாட்டாளர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.