அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருமுறை சந்திப்பு நடத்திய கிம் ஜோங் அன், அந்த சந்திப்பில் திருப்தி ஏற்படாததால், தற்போது ரஷ்ய அதிபர் கிம் ஜோங் அன்னை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்துப் பேசினார்.
அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் அன், முதல்முறையாக சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருமுறை டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் புதிய அணு ஆயுத சோதனைகளை இறங்கி பீதியை கிளப்பினார் கிம்.
இந்நிலையில், தற்போது ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்பட்டு வழக்கம்போல் தனது ரயில் பயணத்தின் மூலம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்குச் நேற்று இரவு சென்றார். அங்கு அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் உற்சாக வரவேற்பினை அளித்து வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், விளாடிவோஸ்டோக்கில் உள்ள அரசு அலுவலகத்தில் கிம் ஜோங் அன்னை வரவேற்று அவருடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்களும், அணு ஆயுத ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பினால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அப்செட் ஆகியுள்ளனர்.