பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கிரேட் காளி!

Wrestler Khali campaigns for BJP nominee, draws huge crowds

by Mari S, Apr 27, 2019, 08:53 AM IST

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான்.

தலிப் சிங் ராணா என்ற இயற்பெயர் கொண்ட 7.1 அடி உயரம் உள்ள கிரேட் காளி, அமெரிக்க குடியுரிமை பெற்று, இந்தியாவின் முதல் WWE சாம்பியனாக ஆனவர்.

கிரேட் காளியும் அனுபம் ஹஸ்ராவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்த தேர்தலில் அவருக்காக ஒரு வாரம் வாக்கு சேகரிக்கும் பணியில் கிரேட் காளி ஈடுபடவுள்ளார். அவரைக் காணவே ரசிகர்கள் கூட்டம் நேற்று ஜாதவ்பூரில் களைகட்டியது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விலகிய அனுபம் ஹஸ்ரா, தற்போது திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக அந்த தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள சினிமா நடிகர் மிமி சக்கரபார்த்தி மற்றும் சிபிஎம்மின் பிகாஷ் பட்டாச்சார்யாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

பிரியங்கா போட்டியிடாததற்கு உண்மையான காரணம் என்ன?

You'r reading பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கிரேட் காளி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை