ஆந்திராவில் அடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்பது நிச்சயமாகி விட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு படவுலகில் புகழ் பெற்ற நடிகையாக இருந்து ஆந்திராவில் அரசியல்வாதியாக செட்டில் ஆனவர் ரோஜா. தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அவர் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். இந்நிலையில், திருப்பதிக்கு வந்த நடிகை ரோஜா, ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களிடம் ரோஜா கூறியதாவது:
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அவருடைய குடும்பத்தினர் நன்கு சம்பாதித்துள்ளனர். தெலுங்கு தேசம் ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால, இந்த தேர்தலில் மக்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி அவரது தந்தையை போலவே ஆந்திராவை வளர்ச்சியடைய செய்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே, ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராவது உறுதி. வெற்றியை கொண்டாட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர். தயார் ஆகி வருகின்றனர். தேர்தலுக்கு முன்ப மகளிர் குழுவினருக்கு மஞ்சள் - குங்குமம் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி மூன்று கட்டமாக காசோலைகளை வழங்கினார். பழைய கடன்களை ரத்து செய்வோம் என கூறி, பெண்களை சந்திரபாபு நாயுடு ஏமாற்றினார்.
எனவே, இந்த முறை சந்திரபாபு நாயுடுவை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. நான், நகரி தொகுதியில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.