நாவூறும் ருசியில் கருவாடு தொக்கு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2
பூண்டு - 5
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
அத்துடன், தக்காளி சேர்த்து வேகவிடவும். கூடவே, மஞ்சள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
தக்காளி நன்றாக வெந்ததும், கழுவி சுத்தம் செய்த நெத்திலி, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர், தண்ணீர் சேர்த்து கலந்து கருவாடு வேகும் வரை விடவும்.
கருவாடு வெந்து, மசாலா தொக்கு பதத்திற்கு வந்ததும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான கருவாடு தொக்கு ரெடி..!