டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களை பா.ஜ.க. கூட்டணி வளைத்து விட்டது. டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளிலுமே பா.ஜ.க. வென்றது. இதையடுத்து, அடுத்த ஆண்டு நhttp://www.bookmark4you.com/tag/today-tamil-newsடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய கட்டாயம், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கி விட்டார் ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான கெஜ்ரிவால்.
கடந்த வாரம் அவர், அரசு பேருந்துகளில் மற்றும் டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது, அவர்கள் இலவசமாக பயணிக்க வகை செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டம், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்திய திட்டம். தற்போது மெட்ரோ ரயிலை தனி அமைப்பு நிர்வகித்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு மெட்ரோ ரயில் இது வரை பதிலளிக்கவில்லை. அதே சமயம், கடந்த முறை கட்டணம் உயர்த்தப்பட்ட போது அதை ரத்து செய்யச் சொல்லி கெஜ்ரிவால் கேட்டதற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் மறுத்தது.
தற்போது பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை அளிப்பதால் ஏற்படும் இழப்பை டெல்லி மாநில அரசின் சார்பில் மானியமாக தருவதாக கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். ஆனாலுமே அதை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்காது என தெரிகிறது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கிய போது அதற்கு மூலகர்த்தாவாக விளங்கிய முன்னாள் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘‘டெல்லி மெட்ரோ ரயில் நஷ்டத்தில் இயங்கினால், அந்த திட்டம் தோல்வியடைந்து விடும்.
எனவே, இ்ந்த ரயிலில் மட்டும் யாருக்கும் பயணச் சலுகை அறிவிக்கவே கூடாது என்று திட்டம் தொடங்கிய காலத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, அவரே டிக்கெட் வாங்கித்தான் பயணம் செய்தார். மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் கூட டிக்கெட் வாங்கித்தான் பயணம் செய்கிறார்கள். எனவே, டெல்லி மாநில அரசின் பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை அளிக்கும் திட்டத்தை ஏற்கக் கூடாது’’ என்று கோரியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஸ்ரீதரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘நாங்கள் 4 ஆண்டு கால ஆட்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் தலையிட்டதே இல்லை. மெட்ரோ ரயில்களில் தினமும் 40 லட்சம் பேர் பயணிக்க வசதி உள்ளது. ஆனால், தற்போது 25 லட்சத்திற்கும் குறைவானவர்களே பயணிக்கிறார்கள். நாங்கள் பெண்களின் பாதுகாப்புக்காக இலவச பயணச் சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளோம். இதற்காக, டெல்லி மாநில அரசு மொத்தமாக கூப்பன்களை மெட்ரோ ரயிலில் பெற்று கொள்ளத் தயாராக உள்ளது. இதன் மூலம், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வருமானம் அதிகரிக்கவே செய்யும். எனவே, எங்கள் திட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை. பொதுவாகவே, இலவசத் திட்டங்களுக்கு பா.ஜ.க. அரசு எதிராக இருக்கும். ஆயினும் தற்போது மோடி அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மாறியிருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.