மிக மோசமான பாசிச ஆட்சி சந்திரசேகரராவ் மீண்டும் பேச்சு

Called Modi a fascist and stand by it, says KCR

by எஸ். எம். கணபதி, Jun 19, 2019, 11:49 AM IST

மோடி ஆட்சிதான் மிக மோசமான பாசிச ஆட்சி என்று முதன்முதலில் சொன்னது நான்தான், அதையே இப்போதும் சொல்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ், ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்தே பேட்டியில் கூறியதாவது:

நான்தான் முதன்முதலில் மோடி ஆட்சியை மிக மோசமான பாசிச ஆட்சி என்று விமர்சித்தேன். இப்போதும் அதையேத் தான் சொல்கிறேன். பா.ஜ.க.வை எப்போதும் எதிர்ப்போம். ஆனால், மத்திய அரசுடன் அரசியலமைப்புச் சட்டரீதியான உறவுகளை தொடர்வோம்.

காலேஸ்வரம் பாசனத் திட்டம் என்பது எனது கனவுத் திட்டம். வரும் 21ம் தேதி நடைபெறும் இதன் தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைக்கவில்லை. எல்லா விழாவுக்கும் அவரை அழைக்க வேண்டுமென்று விதிமுறை எதுவும் கிடையாது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றுப் பாசனத் திட்டமான காலேஸ்வரம் திட்டத் தொடக்க விழாவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் பட்னாவிஸ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆகியோரை அழைத்துள்ளேன்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் தொடர்பாக பிரதமர் கூட்டிய கூட்டத்திற்கு நான் போகவில்லை. கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமாராவ்(சந்திரசேகர ராவ் மகன்)செல்வார். மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுடன் கிருஷ்ணா, கோதாவரி நீர்ப்பங்கீட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காண்போம்.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

ஆந்திராவில் 5 துணைமுதல்வர் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு

You'r reading மிக மோசமான பாசிச ஆட்சி சந்திரசேகரராவ் மீண்டும் பேச்சு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை