ராமதாஸின் அநாகரீகப் பேச்சு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

madras union of journalists condemned Dr.Ramadoss for his threataning speech against media

by எஸ். எம். கணபதி, Jun 23, 2019, 09:10 AM IST

ஊடகங்கள் மீது அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின்(MUJ) பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 

சென்னையில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு இன்று (22-06-2019) நடத்திய 'வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல்' என்ற கருத்தரங்கில், தமிழகத்தின் மூத்த தலைவரும், பா.ம.க நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் உரையாற்றினார். அப்போது, செய்தியாளர்களை அநாகரிகமாகவும் கண்ணியக் குறைவான வார்த்தைகளிலும் அவர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

 

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும் சொல்லாமல் விட்டு விடுவதும் ஒரு தலைவரை சார்ந்தது. ஆனால், தமிழகத்தின் மூத்த தலைவரான டாக்டர் ராமதாஸ், கேள்வி கேட்ட செய்தியாளர்களை இப்படிப் பேசி இருப்பது அழகானதல்ல என்பதை சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) சுட்டிக்காட்டுவதுடன், கடும் கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு எல்.ஆர்.சங்கர் தெரிவித்துள்ளார்.

You'r reading ராமதாஸின் அநாகரீகப் பேச்சு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை