கையெழுத்திட மறுக்கும் ராகுல் காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

Rahul Gandhis resignation leaves Congress in leadership vacuum

by எஸ். எம். கணபதி, Jun 24, 2019, 12:51 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ள ராகுல்காந்தி, கட்சி தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட மறுத்து வருகிறாராம். இதையடுத்து, புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைய வயது 134. இத்தனை ஆண்டுகளாக உயிரோட்டமாக இருந்த கட்சி, கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 44 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் 52 தொகுதிகளை மட்டுமே பிடித்து இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது.

இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல்காந்தி ராஜினாமா செய்யவுள்ளார் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததும் அதை மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு வேறு சிறந்த ஆள் கிடையாது என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். ஆனால், ராகுல் காந்தி அசைந்து கொடுக்கவில்லை.

கடைசியில் பாரம்பரியமிக்க காங்கிரசுக்கு யார் தலைவர் என்பதே தெரியாமல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கட்சித் தலைவர் என்ற முறையில் கட்சியின் கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்து வருகிறாராம். இதனால், காங்கிரஸ் வெளியிடும் அறிவிப்புகளில் ராகுல் கையெழுத்தின்றி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் மட்டுமே தாங்கி வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் மட்டுமே கையெழுத்திடுகிறாராம்.

இதனால், புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்று பேச்சும் மூத்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஆலோசனை சொல்லக் கூட ராகுல் மறுத்து விட்டாராம். இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோரில் ஒருவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்க யோசித்து வருகிறார்களாம். எனினும் யாராலும் உறுதியான முடிவை எட்ட முடியவில்லையாம்.

மேலும், கட்சிக்கு ஒரு ெசயல் தலைவரை மட்டும் நியமித்து, அவருக்கு ஆலோசனை வழங்க உயர்மட்டக் குழு அமைக்கலாமா என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரிசீலித்து வருகிறார்களாம்.

ஓட்டு இருந்தும் ஜெயிக்க முடியாது; பாவம் காங்கிரஸ்

You'r reading கையெழுத்திட மறுக்கும் ராகுல் காங்கிரஸ் புதிய தலைவர் யார்? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை