மோடி ஆட்சியில் சூப்பர் எமர்ஜென்சி மம்தா பானர்ஜி கடும் தாக்கு

Country Went Through Super Emergency: Mamata Banerjee Hits Out At PM Modi

by எஸ். எம். கணபதி, Jun 25, 2019, 11:37 AM IST

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி தாக்கியுள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாட்டில் நெருக்கடி நிலையை(எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தினார். 21 மாதங்கள் நெருக்கடி நிலை நீடித்தது. அப்போது நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்தும் அரசு அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்ட பின்பே வெளியிட அனுமதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பல சம்பவங்கள் நடைபெற்றன.

எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட தினம், ஜூன் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு வருமாறு:

இன்று எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட தினம். கடந்த 5 ஆண்டுகளாக நாடு, சூப்பர் எமர்ஜென்சியில் இருக்கிறது. வரலாற்றில் இருந்து நாம் பாடங்களை கற்றுக் ெகாள்ள வேண்டும். ஜனநாயக அமைப்புகளை பாதுகாப்பதற்கு நாம் போராட வேண்டும்.
இவ்வாறு மம்தா கூறியிருக்கிறார்.

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' ; பிரதமர் மோடியின் கருத்துக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு - அதிமுகவும் ஒதுங்கியது

You'r reading மோடி ஆட்சியில் சூப்பர் எமர்ஜென்சி மம்தா பானர்ஜி கடும் தாக்கு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை