மோடியின் அறிவிப்புகளுக்கு ப.சிதம்பரம் திடீர் பாராட்டு

Chidambaram hails these 3 announcements made by PM Modi on I-Day

by எஸ். எம். கணபதி, Aug 16, 2019, 12:22 PM IST

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அவற்றின் ஒவ்வொரு முடிவுகளையும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்து, ட்விட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் 3 முக்கிய அறிவிப்புகளுக்கு சிதம்பரம் திடீரென பாராட்டு தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் வருமாறு:

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அடிப்படையில் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

சிறிய குடும்பம் என்பது தேசத்திற்கு ஆற்றும் கடமை. வளங்களை ஏற்படுத்துபவர்களை மதிக்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்.

இந்த மூன்று அறிவிப்புகளுமே பாராட்டத்தக்கவை. இந்த மூன்றில் 2 வது விஷயத்தை நிதியமைச்சரும், வரி அதிகாரிகளும் ெதளிவாக கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
முதல் மற்றும் 3வது விஷயங்கள், மக்கள் இயக்கங்களாக மாற்றப்பட வேண்டும். உள்ளூர் அளவிலேயே மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு உழைக்க ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இவ்வாறு ப.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திர தின விழா; ஆளுநர் தேநீர் விருந்து

You'r reading மோடியின் அறிவிப்புகளுக்கு ப.சிதம்பரம் திடீர் பாராட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை