கொல்கத்தாவில் நள்ளிரவு நேரத்தில் போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல வங்க நடிகையும் பாஜக எம்பியுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே.வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் கோல்ப் கிளப் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் சுற்றுப்புற கட்டிடத்தின் மீது, நேற்று நள்ளிரவில் தாறுமாறான வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் சுவர் இடிந்து காரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த 20 வயது இளைஞரும் காயங்களுடன் சிக்கிக் கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காரில் இருந்த இளைஞரை மீட்டனர்.
அப்போதுதான் தெரிந்தது காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர், பிரபல வங்காள நடிகையும் , தற்போதைய பாஜக எம்.பி.யுமான ரூபா கங்குலியின் மகன் ஆகாஷ் முகோபத்யாய் என்பது தெரிய வந்தது.
மேலும், ஆகாஷ் முகோபாத்யாய் மதுபோதையில் இருந்ததாகவும், அபாயகரமான முறையில் தாறுமாறாக காரை ஆகாஷ் முகோபாத்யாய் ஓட்டி வந்ததாக நேரில் கண்டவர்கள் குற்றம் சாட்டினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்த சேதமும் ஏற்படவில்லை. நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த பலர் உயிர் தப்பி விட்டனர் என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டினர்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் பாஜக எம்பி ரூபா கங்குலியின் வீடும் உள்ளது. உடனே தகவல் தெரிந்து அவருடைய கணவருடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆகாஷ் முகோபாத்யாத்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவரை கைதும் செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான ரூபா கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகனை தான் மிகவும் நேசிப்பதாகவும், விபத்து குறித்து தானே போலீசுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனால் சட்டம் அதன் கடமையை செய்யும். இந்த விபத்து குறித்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பாஜக எம்எல்ஏவால் பாலியல் கொடுமைக்கு ஆளான உன்னோவ் பெண் உயிர் ஊசல்