உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்படும் : சி.வி.சண்முகம் பேட்டி

by எஸ். எம். கணபதி, Sep 3, 2019, 13:09 PM IST

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுவது போல், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்ந்து தமிழில் வெளியாவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மொழிமாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஏதேனும் உதவிகள் கேட்டால், தமிழக அரசு அதை செய்து ெகாடுக்கும். மொழிமாற்றம் செய்வதற்கான மென்பொருள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிடுவதற்கு தலைமை நீதிபதியிடம் பேசியிருக்கிறோம். விரைவில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழில் வெளியிடப்படும்.

இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


More Politics News