மேற்குவங்கத்தில் சட்டசபைத்தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும் மீதமுள்ள வாக்குப்பதிவுக்கான சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தவகையில் பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா மீது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு சமீபத்தில் ஒன்றை தெரிவித்தார்.
அதாவது மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎப் வீரர்கள் அமித் ஷாவின் பேச்சை கேட்டுக்கொண்டு மக்களை பாஜகவுக்கு வாக்களிக்க. வலியுறுத்துகின்றனர். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக சிஆர்பிஎப் வீரர்கள் துன்புறுத்துகின்றனர். இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தான் இது போன்ற சிஆர்பிஎப் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை என்று பேசினார்.
இதேபோல் முஸ்லீம் வாக்குகள் தொடர்பாகவும் மம்தா பேசியிருந்தார். இவரின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மம்தா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து அதிரடி காட்டியுள்ளது.