அண்ணா பிறந்தநாள்... கொண்டாடும் கட்சிகள்

மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Anna Birthday

சென்னை அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு கீழே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முதலமைச்சர் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

READ MORE ABOUT :