அதிமுகவை குறை கூறினால் நாக்கை அறுப்போம் என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆவேச பேச்சை கண்டித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாவடக்கம் தேவை என அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அமைச்சர் துரைகண்ணு பேசுவது முறையற்ற பேச்சு. தங்களுடைய பொறுப்பை உணர்ந்து அமைச்சர் பதவிக்கு கொடுக்க வேண்டிய மாண்பை காப்பாற்ற வேண்டும். வெட்டுவேன், குத்துவேன், நாக்கை அறுப்பேன் என்று சொல்வது சரியல்ல"
"அ.தி.மு.கவை நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். அதற்காக என் நாக்கை வெட்டுவார்களா?. எல்லோரும் ஆவேசமாக பேசினால் என்னவாகும். ஆட்சியில் இருக்ககூடியவர்கள் தயவுசெய்து இதுபோன்ற விசயங்களை தவிர்க்க வேண்டும்." என பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது.
இந்த விவகாரத்தை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பகடக்காயாக பயன்படுத்துகிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்