மகாத்மா காந்தி வாங்கித்தந்த சுதந்திர நாட்டில் தமிழ்நாட்டு காந்தியின் விடுதலைக்காக அமெரிக்கா வாழ் தமிழர்கள் சான் பிரான்சிஸ்கோவில் போராட்டம் நடத்தினர்.மேலும் ஒருங்கிணைந்து போராடுமாறு அனைத்து தமிழக கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி பேசியதற்க்காக தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு ஐம்பது நாட்களாகியும் ஜாமினில் கூட வெளிவரமுடியாமல் பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீப நாட்களாக அவரது உயிருக்கு ஆபத்துள்ளதாக பரவிவரும் செய்தியால் மே 17 இயக்கத்தினரிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களின் அறைகூவலாக பார்க்கப்படுகிறது .மேலும் திருமுருகன் காந்தியின் விடுதலையில் அரசின் மெத்தன போக்கு இனியாவது மாறவேண்டும் . இப்போராட்டம் தமிழர் எங்கிருந்தாலும் தமிழர்களாகத்தான் ஜொலிப்பர். சாதி, மத, பேதங்கள், கட்சி நடத்துபவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கு மட்டும்தான் என்று முரசுக்கொட்டியுள்ளது.
மேலும் திருமுருகன் காந்தியை அந்நிய நாட்டு கைக்கூலி என்று வர்ணித்தவர்களுக்கு அந்நிய நாட்டில் வசித்தாலும் நாங்க தமிழன்டா கைக்கூலிகளல்ல என்று நெஞ்சுநிமிர்ந்த சிங்கங்களின் கர்ஜனை எச்சரிக்கை மணியாகிருக்கிறது.
போராட்டத்தின் முடிவில் பாரதப்பிரதமருக்கு திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுமாறு அனைவரும் கையெழுத்திட்ட மனுவொன்றை அனுப்பியுள்ளனர். #ReleaseThirumuruganGandhi