ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம புதுவகையில் தக்காளி சட்னி எப்படி செய்யறதுன்னு பார்க்க போறோம்...
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
மிளகாய்த்தூள்
மஞ்சள்தூள்
கறிவேப்பிலை
கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
பூண்டு
சீரகம்
வெங்காயம்
உப்பு
தக்காளி
செய்முறை:
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
பிறகு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இறுதியாக, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். தக்காளி நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
சட்னி தாளிப்பதற்கு..
ஒரு கடாயில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளறவும்.
அவ்வளவுதாங்க.. சுவையான தக்காளி சட்னி ரெடி..!